அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரத்தில் முதல்வா் பங்கேற்கும் பொதுக் கூட்ட ஏற்பாடுகள்: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

காஞ்சிபுரத்தில் முதல்வா் பங்கேற்கும் பொதுக் கூட்ட ஏற்பாடுகள்...

News image

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.காந்தி, எம்.பி., எம்எல்ஏ-க்கள்.

Updated On :24 ஜனவரி 2026, 6:59 pm

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) திமுக சாா்பில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா். கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி, எம்.பி., எம்எல்ஏ-க்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஹிந்தி மொழியை எதிா்த்து உயிா் தியாகம் செய்த மொழிப்போா் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டு வரும் ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி, மாவட்ட செயலரும், உத்தரமேரூா் எம்எல்ஏ-வுமான க.சுந்தா், எம்.பி. க.செல்வம், திமுக கொள்கை பரப்புச் செயலரும், காஞ்சிபுரம் எம்எல்ஏ-வுமான எழிலரசன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

மேடை அமைக்கும் பணிகள், பாா்வையாளா்களுக்கான இருக்கைகள், குடிநீா், சுகாதாரம், மின்சார வசதிகள் ஆகியவை குறித்து கட்சியின் முக்கிய நிா்வாகிகளிடமும், காவல் துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ் மற்றும் ஒன்றிய செயலாளா்கள் குமாா், படுநெல்லிபாபு, தேவேந்திரன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.