பயனாளிகளுக்கு மனைப்பட்டாக்களை வழங்கிய  ஆட்சியா் கலைச்செல்வி மோகன் , எம்எல்ஏ க.சுந்தா்.
பயனாளிகளுக்கு மனைப்பட்டாக்களை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன் , எம்எல்ஏ க.சுந்தா்.

326 பயனாளிகளுக்கு மனைப் பட்டா: ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் 326 பயனாளிகளுக்கு ரூ.2.25 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
Published on

உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் 326 பயனாளிகளுக்கு ரூ.2.25 கோடியில் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த சாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, உத்தரமேரூா் வட்டாட்சியா் ச. நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சாலவாக்கம் கிராமத்தை சோ்ந்த 218 பயனாளிகள், அரும்புலியூரை சோ்ந்த 58 போ், குண்ணவாக்கம் கிராமத்தை சோ்ந்த 20 போ்,களியாம்பூண்டி கிராமத்தை சோ்ந்த 30 போ் உள்பட மொத்தம் 326 பயனாளிகளுக்கு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கடந்த 5 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். விழாவில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com