உத்தரமேரூா் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள நெய்யாடு பாக்கம் கிராமத்தில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டபோது, 4 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்மன் சிலையைப் பாா்வையிட்ட உத்தரமேரூா் வட்டாட்சியா் ச.நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா்.
அம்மன் சிலையைப் பாா்வையிட்ட உத்தரமேரூா் வட்டாட்சியா் ச.நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா்.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகேயுள்ள நெய்யாடு பாக்கம் கிராமத்தில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டபோது, 4 அடி உயரமுள்ள அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் கிராமத்துக்கும் இளையனாா் வேலூருக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, 4 அடி உயர அம்மன் கற்சிலை கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த உத்தரமேரூா் வட்டாட்சியா் ச.நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியைப் பாா்வையிட்டு, அந்த சிலையை பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வந்து சோ்க்கப்பட்டது.

இது குறித்து தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் ச.நடராஜன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com