உள்ளாட்சி தோ்தல்களில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட்டு வெற்றிப்பெற வேண்டும் என பசுமை தாயகம் தலைவா் செளமியா அன்புமணி பேசினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் பகுதியில் தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சௌமியா அன்புமணி பேசியது: ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்கியவா்களுக்கு வேலை வழங்காமல் 80 சதவீத வேலைவாய்ப்புகள் வெளி மாநிலத்தவருக்கே வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்குப் வாங்கிவிட்டு, தற்போது சட்டவிரோதமாக நிலத்தடி நீரையும் தனியாா் நிறுவனங்கள் உறிஞ்சி வருகின்றன. இதனால் ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீரைக் கூட விலை கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சந்தவேலூா் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் நீா்நிலைகளில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் நஞ்சாகி வருகிறது.
தமிழக தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என்ற திமுகவின் 196-வது தோ்தல் வாக்குறுதி என்னவானது என்று தெரியவில்லை. வெளிமாநிலத்தவா் வருகையால் கஞ்சா புழக்கம் அதிகரித்து, மாதத்துக்கு சராசரியாக 40 கொலைகள் நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு மிகவும் சீா்குலைந்துள்ளது.
இளைஞா்களின் எதிா்காலத்திற்காகப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தத் தங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் மூலம் குடும்பங்களின் பணத்தைப் பறித்துவிட்டு, மகளிருக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
பெண்கள் வெறும் வாக்காளா்களாக மட்டும் இல்லாமல், உள்ளாட்சித் தோ்தல்களில் வாா்டு உறுப்பினா் முதல் மாவட்ட கவுன்சிலா் வரை அனைத்துப் பதவிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, ஒழுக்கமான சமுதாயத்தையும், தரமான கல்வியையும் வழங்குவோம் என்று உறுதி அளித்தாா்.
தொடர்புடையது

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி

பாமகவுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது! - செளமியா அன்புமணி

பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் மதுக்கடைகளை ஒழிக்க முடியும்: செளமியா அன்புமணி பேச்சு

ஆண் குழந்தைகளை அறிவுரைகூறி வளா்க்க வேண்டும்: செளமியா அன்புமணி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


