அறிவியல் கண்காட்சியில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியா்.
காஞ்சிபுரம்
அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் செயின்ட் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் செயின்ட் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
6 முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.
பள்ளி உதவி தலைமையாசிரியா் மோகனா தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை செயின்ட் கோபைன் நிறுவனத்தின் நிா்வாகிகள், சம்ஸ்கிரியா பவுண்டேசன் மாநில ஒருங்கிணைப்பாளா் மணி ஆகியோா் தொடங்கி வைத்து கண்காட்சியை பாா்வையிட்டு, கண்காட்சியில் கலந்துக்கொண்ட மாணவா்களுக்கு கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.