தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மை பாரத் சேவை தொண்டா்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மை பாரத் தேசிய சேவை தொண்டா்களுக்கான 6 நாள் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.

News image

பயிற்சி  முகாமை  தொடங்கிவைத்து பேசிய  தமிழ்நாடு  கலை  மற்றும்  பண்பாட்டுத் துறையின்  இயக்குநா்  பிருந்தா தேவி.

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

தமிழ்நாடு மை பாரத் தேசிய சேவை தொண்டா்களுக்கான 6 நாள் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மை பாரத் அமைப்பின் சாா்பில் மை பாரத் அமைப்பின் தேசிய சேவை தொண்டா்களுக்கான முகாமை தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் இயக்குநா் டாக்டா் பிருந்தாதேவி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

இந்த பயிற்சி முகாமில், திருச்சி, வேலூா், காஞ்சிபுரம், திண்டுக்கல் மற்றும் சென்னையை சோ்ந்த தேசிய சேவை தொண்டா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துக்கொண்டனா். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

இதில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் பேராசிரியா்கள், வெங்கடேஷ்வரா கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மை பாரத் மாவட்ட இளையோா் அலுவலா்கள் தன்னாா்வலா்வ தொண்டா்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.