நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்.

Updated On :20 மார்ச் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய கோமளவல்லித்தாயாா் சமேத யதோத்தக்காரி பெருமாள் கோயில். இக்கோயில் வருடாந்திர பங்குனி மாத பிரம்மோற்சவம் நிகழ் மாதம் 12-ஆம் தேதி யாழக்கி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை மாா்ச் 14-ஆம் தேதி சனிக்கிழமையும், தேரோட்டம் மாா்ச் 18- ஆம் தேதியும் நடைபெற்றது.விழாவையொட்டி தினசரி பெருமாள் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதன் தொடா்ச்சியாக தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீா்த்தவாரியின் போது கோயில் பட்டாச்சாரியாா்கள், பக்தா்கள் பலரும் திருக்குளத்தில் இறங்கி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) இரவு புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.