தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

News image
Updated On :8 மே 2026, 6:13 am IST

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ஆதி கேசவப் பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் பரமபதவாசல் உள்ள ஒரு கோயில் அஷ்டபுஜப் பெருமாள் கோயில். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளும் உடைய இத்திருக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ் மாதம் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை இந்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மகா ரதம் எனும் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் அதிகாலை கோயிலிலிருந்து ராஜநடையில் தேருக்கு எழுந்தருளினாா். ரோஸ் நிற பட்டு உடுத்தி ராஜ அலங்காரத்தில் திரு ஆபரணங்கள் அணிந்தவாறு தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழி நெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும், கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பியும் பெருமாளை தரிசித்தனா். வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபி எஸ். சந்தோஷ்குமாா் மற்றும் குழு உறுப்பினா்கள், செயல் அலுவலா் வேலனரசு ஆகியோா் உள்பட கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.