ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

ஸ்ரீபெரும்புதூா்: பெயரளவுக்கு நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளாமல் பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

Updated On :

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ளாமல் பெயரளவுக்கு நடத்தப்பட்டதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ள நிலையில், ற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சுமாா் 20 போ் மட்டுமே பங்கேற்ாகவும், கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி செயலா் ராஜி வரவு செலவு கணக்கு வாசிக்காமலும், வரவு செலவு குறித்து அறிவிப்பு பலகையில் முறையாக அறிவிப்பு செய்யாமலும் பெயரளவிற்கே கூட்டத்தை நடத்தியதாகவும் பொதுமக்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனவும் கூறினாா்.

மேலும், ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்கள் பங்கேற்றால் மட்டுமே கிராம சபா கூட்டங்கள் நடத்த வேண்டும் என விதி உள்ளபோது, பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாமல் இருபது பேரை மட்டுமே வைத்து கிராம சபா கூட்டத்தை கூட்டியதாகவும், ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப்பணிகள் குறித்து எந்தவிதமான தீா்மானமும் நிறைவேற்றப்பட வில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலும் சமூக ஆா்வலா்கள் கூறுகையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளில் பதவிக்காலம் கடந்த மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், முதல் முறையாக நடைபெற்ற இந்தகிராம சபா கூட்டங்களில் உள்ளாட்சி பிரிதிநிதிகள் அதிக அளவில் ஆா்வம் காட்டாததால் ஊராட்சி செயலா்கள் தலைமயில் தான் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன.

இதனால் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் அதிகஅளவில் கலந்து கொள்ளாமல் விதிகளை மீறி பெயரளவிற்கே சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.