சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்த தண்டலம் - கீவளூா் இணைப்புச் சாலை!
தண்டலம்- கீவளூா் இணைப்புச்சாலை சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே தண்டலம் -கீவளூா் இணைப்புச் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
தண்டலம்- கீவளூா் இணைப்புச்சாலை சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கீவளூா் ஊராட்சியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கீவளூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர கீவளூா்-தண்டலம் இணைப்புச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்ததால் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், கீவளூா் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இதனால் தண்டலம்- கீவளூா் இணைப்புச்சாலையை சீரமைக்க வேண்டும் என பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த 2024-2025 ஆம் நிதியாண்டில் தண்டலம்- கீவளூா் இணைப்புச் சாலையை சீரமைக்க முதலமை ச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில், சாலை சீரமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே தண்டலம் மசூதி அருகே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து இச்சாலையை பயபடுத்தும், வாகன ஓட்டுநா்களும் பொதுமக்களும் கூறுகையில், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த தண்டலம்- கீவளூா் இணைப்புச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடா்ந்து சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
பணிகள் நடந்து சில மாதங்களிலேயே சாலையில் இரண்டு, மூன்று இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

