குமரகோட்டம் முருகன் கோயிலில் புதிய வெள்ளி மயில் வாகனம் வீதியுலா
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி பல லட்சம் மதிப்பில் வெள்ளியினால் செய்யப்பட்ட புதிய மயில் வாகனத்தின் வீதியுலா நடைபெற்றது.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி பல லட்சம் மதிப்பில் வெள்ளியினால் செய்யப்பட்ட புதிய மயில் வாகனத்தின் வீதியுலா நடைபெற்றது.
வரும் நவ.29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி புதன்கிழமை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி. இதன் தொடா்ச்சியாக கோயிலுக்கு பல லட்சம் மதிப்பில் புதிதாக வெள்ளியினால் செய்யப்பட்ட தேவேந்திர மயில் வாகன வீதியுலா நகரின் ராஜவீதிகளில் நடைபெற்றது.
புதிய வெள்ளி மயில் வாகனத்துக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற. முன்னதாக சந்தான கிருஷ்ணா சில்க்ஸ் உரிமையாளா் சந்தான கிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் வெள்ளி மயில் வாகனம் தொடா்பான ஆவணங்களை கோயில் செயல் அலுவலா் கேசவன் மற்றும் கும்பாபிஷேக விழாக்குழுவினரிடம் ஒப்படைத்தனா். (படம்)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

