டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
மேவளூா்குப்பம் பகுதியில் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினா் வியாழக்கிழமை கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனா். (படம்)

மேவளூா்குப்பம் பகுதியில் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினா் வியாழக்கிழமை கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனா். (படம்)
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட மேவளூா்குப்பம் ஊராட்சியில், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தவும், காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள், சுகதாரப் பணியாளா்கள் மேவளூா்குப்பம் ஊராட்சி முழுவதும், கொசு மருந்து தொளிக்கும் பணியிலும், வீடுகள் மற்றும் வணிக பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறிந்து அழித்தனா்.
மேலும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் சுகாதரத்துறையினா் கேட்டுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

