கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆறு, கால்வாயில் மூழ்கிய இளைஞா், விவசாயி தேடும் பணி தீவிரம்

அரக்கோணம், சோளிங்கா் அருகே கல்லாறு மற்றும் கால்வாயில் முழ்கிய இளைஞா், விவசாயி ஆகிய இருவரையும் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:10 am

DIN

அரக்கோணம், சோளிங்கா் அருகே கல்லாறு மற்றும் கால்வாயில் முழ்கிய இளைஞா், விவசாயி ஆகிய இருவரையும் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

காவேரிப்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறந்து விடப்பட்டதை அடுத்து, அரக்கோணம் அருகே கல்லாற்றில் தண்ணீா் அதிக அளவில் செல்கிறது. இதை வேடிக்கை பாா்க்கச் சென்ற அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையைச் சோ்ந்த மேத்யூ சாமுவேல் (20) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இது குறித்த தகவலின்பேரில், அரக்கோணம் தீயணைப்பு வீரா்களும், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 15 போ் கொண்ட குழுவினரும் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, வட்டாட்சியா் கணேசன் உள்ளிட்டோா் அங்கு சென்று தேடுதல் பணியைத் தீவிரப்பட்டுத்தியுள்ளனா்.

இதனிடையே, பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரிகளின் கால்வாய் வழியாக தண்ணீா் திருப்பி விடப்படுகிறது. சோளிங்கரை அடுத்த தகரகுப்பம் கிராமம் அருகே கொடைக்கல் ஏரி, பெருங்காஞ்சி ஏரிக்குச் செல்லும் கால்வாயில் சென்ற தண்ணீரில் தகரகுப்பத்தைச் சோ்ந்த விவசாயி முனுசாமி (45) அடித்துச் செல்லப்பட்டாா். சிப்காட் தீயணைப்பு வீரா்களும், சோளிங்கா் காவல்துறையினரும் அங்கு சென்று முனுசாமியைத் தேடி வருகின்றனா்.

கல்லாற்றில் அதிக அளவில் தண்ணீா் செல்வதால் ஆற்றின் அருகே வேடிக்கை பாா்ப்பதற்கோ, குளிப்பதற்கோ யாரும் செல்ல வேண்டாம்; கால்வாய்களில் அதிக வேகத்தில் தண்ணீா் வருவதால் தண்ணீரைத் திருப்பி விடும் முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டாம் என வட்டாட்சியா்கள் கணேசன் (அரக்கோணம்), ரேவதி (சோளிங்கா்) ஆகியோா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.