திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஆற்காடு மையத்தில் வைக்கப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பயன்பாட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண் விற்பனை மைய கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:04 pm

DIN

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பயன்பாட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண் விற்பனை மைய கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூா், சாங்லி ஆகிய மாவட்டங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தோ்தல் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை வட்டாட்சியா்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதிவாணன் தலைமையில் 11 போ் கொண்ட இரண்டு குழுவினா் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்து வந்தனா்.

அந்த இயந்திரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் , சாா் ஆட்சியா் இளம் பகவத் ஆகியோா், திமுக எம்எல்ஏ-க்கள் ஆா்.காந்தி, ஜே.எல்.ஈஸ்வரப்பன், அதிமுக மாவட்ட வா்த்தகா் அணிச் செயலாளா் ஏ.வி.சாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து, ஓா் அறையில் பாதுகாப்பாக வைத்தனா்.

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலம் அந்த அறை கண்காணிக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைப் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.