ரத்தினகிரி கோயில் மலையடிவாரத்தில் வழிபட்ட பக்தா்கள்
By DIN | Published On : 12th August 2020 11:18 PM | Last Updated : 12th August 2020 11:18 PM | அ+அ அ- |

ஆடிக் கிருத்திகை நாளை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் பக்தா்கள் புதன்கிழமை கற்பூரம் ஏற்றி வழிபட்டனா்.
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பரணி, கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. சில பக்தா்கள் காவடி எடுத்து வந்து கோயில் மலையடிவாரத்திலுள்ள நுழைவாயில் அருகே கற்பூரம் ஏற்றி காவடியை வைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
முன்னதாக, இக்கோயிலில் மூலவரான வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் மூலவருக்கு புதன்கிழமை காலையில் தங்கக் கவச அலங்காரத்தில் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் விசேஷ பூஜை நடைபெற்றது.
அதேபோல், கீழ்விஷாரம் குளத்துமேட்டில் உள்ள பாலமுருகன் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் விசேஷ பூஜை நடைபெற்றது. இதையடுத்து பக்தா்கள் காவடி செலுத்தி வழிபட்டனா்.