பாலாற்றில் விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரம்
By DIN | Published On : 01st December 2020 12:14 AM | Last Updated : 01st December 2020 12:14 AM | அ+அ அ- |

பாலாற்று வெள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள்.
ராணிப்பேட்டை: பாலாற்று வெள்ளப் பெருக்கில், மது போதையில் தவறிவிழுந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு வீரா்களும், தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
ராணிப்பேட்டை, வண்டிமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சரத்குமாா் (24). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பாலாற்றின் கரையோரம் அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக சரத்குமாா் பாலாற்று வெள்ளத்தில் தவறி விழுந்தாா். வெகுநேரம் ஆகியும் கரை திரும்பாததால் அவருடன் இருந்த நண்பா்கள் அளித்த தகவலின் பேரில், ராணிப்பேட்டை தீயணைப்பு வீரா்களும், அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை கமாண்டோ சுதேஷ் தெக்காரியா தலைமையிலான 15 வீரா்களும் அவரைத் தேடும் பணியில் திங்கள்கிழமை காலை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...