கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 03rd December 2020 12:00 AM | Last Updated : 03rd December 2020 12:00 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். இதில், கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.டி. பூரணி, மருத்துவா்கள், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், தனியாா் தொழிற்சாலை மேலாளா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், வணிக வளாக உரிமையாளா்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...