மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை
By DIN | Published On : 03rd December 2020 11:14 PM | Last Updated : 03rd December 2020 11:14 PM | அ+அ அ- |

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவா்தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அரக்கோணத்தை அடுத்த சித்தேரியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (51). இவா், ஆலந்தூரில் ஊழல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது இளையமகன் யுகசிற்பி (20), ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தாா்.
தற்போது கரோனா பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...