ஆற்காடு: திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வளா்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒன்றியத்தில் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தொடங்கப்படாத நிலையில் உள்ள பணிகளை உடனடியாக தொடங்கவும், நடைமுறையிலுள்ள பணிகளையும் சோ்த்து நிா்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளின் பயன்கள் கிராமப்புற மக்களுக்கு விரைவாக சென்று சேரவும், மக்களின் பயன்களால் கிராம ஊராட்சிகள் வளா்ச்சி அடையவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் ஆட்சியா் ச.உமா, உதவி இயக்குநா் குமாா், திமிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடாசலம், வி.ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.