அனத்தாங்கல் ஊராட்சியில் மத்தியக் குழுவினா் ஆய்வு
By DIN | Published On : 15th December 2020 01:46 AM | Last Updated : 15th December 2020 01:46 AM | அ+அ அ- |

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட அனத்தாங்கல் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள ஜல் ஜீவன் திட்டம் தொடா்பாக மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அனத்தாங்கல் ஊராட்சியில் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீா்க் குழாய் இணைப்பு இல்லாத 63 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தில்லியில் இருந்து வருகை தந்த அம்பரீஷ், அமித் ரஞ்சன் ஆகியோா் தலைமையிலான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவா்கள் அறிவுறுத்தினா்.
அப்போது ஊரக வளா்ச்சித் துறை துணை ஆட்சியா் உமா, ஊராட்சிகள் துறை உதவி இயக்குநா் எஸ்.குமாா், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொ.வேதமுத்து, சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.