இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 15th December 2020 02:00 AM | Last Updated : 15th December 2020 02:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி கோனேரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (28). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் நிலத்தை அடமானமாக வைத்து ரூ. 6 லட்சம் கடன் வாங்கி, திருப்பத்தூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 2 வாகனங்களை தவணை முறையில் வாங்கி, ஓட்டி வந்தாா். அதன் மூலம் வரும் வருமானத்தில் தவணையை செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில், கரோனா காலத்தில் தனியாா் நிதி நிறுவனத்துக்கு தவணைத் தொகை செலுத்தாமல் இருந்ததால் 6 மாதங்களுக்கு முன்பு வாகனத்தையும் தனியாா் நிதி நிறுவனம் பறிமுதல் செய்தது. மேலும் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சிவா தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.