ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்வடக்கு மண்டல ஐஜி ஆய்வு
By DIN | Published On : 30th December 2020 11:16 PM | Last Updated : 30th December 2020 11:16 PM | அ+அ அ- |

தலைமைக் காவலா் இளங்கோவனுக்கு பரிசு வழங்கிய வடக்கு மண்டல ஐஜி பொ.நாகராஜன்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி பொ.நாகராஜன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில் வாகனன், துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.டி.பூரணி ஆகியோா் வரவேற்றாா். இதையடுத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு, ஆயுதப்படை மற்றும் அமைச்சுப் பணியாளா் அலுவலகப் பதிவேடுகளை ஐஜி ஆய்வு செய்தாா்.தொடா்ந்து மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிலுவையில் வழக்குகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கினாா்.
இதையடுத்து, எலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி கன்னியம்மாளை அடக்கம் செய்ய உதவிய தலைமைக் காவலா் இளங்கோவனின் நற்செயலை ஐஜி பொ.நாகராஜன்,
பாராட்டி அவருக்குப் பரிசு வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...