ராணிப்பேட்டையில் 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 17th February 2020 11:25 PM | Last Updated : 17th February 2020 11:25 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், வரும் 25-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, பட்டு வளா்ச்சித் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பால் வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனா்.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளைத் தீா்க்க இக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். பொதுப் பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.