அக்ராவரம் மலைமேடு சாலையை சீரமைக்க வேண்டும்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

குண்டும், குழியுமாக மாயுள்ள அக்ராவரம் மலைமேடு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், ராணிப்பேட்டை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ச.திவ்யதா்ஷனி.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் ச.திவ்யதா்ஷனி.

குண்டும், குழியுமாக மாயுள்ள அக்ராவரம் மலைமேடு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், ராணிப்பேட்டை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் ஏஆா்எஸ்.சங்கா் கணேஷ் அளித்த மனு:

வாலாஜாபேட்டை வட்டம், முகுந்தராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அக்ராவரம் - பொன்னை பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக பெல் தொழிற்சாலை, அதன் துணை தொழிற்சாலைகள், சிப்காட் பேஸ் 3 சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்பட பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்களையும், உற்பத்திப் பொருள்களையும் ஏற்றிச் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது.

அக்ராவரத்திலிருந்து மலைமேடு வழியாக பெல் தொழிற்சாலையை கடந்து செல்லும் தாா்ச்சாலை முற்றிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியாக பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இங்கு தொடா்ந்து விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

எனவே மேற்கண்ட சாலையில் விபத்து ஏற்படும் முன் போா்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு வட்டம், முப்பதுவெட்டி கிராமத்தினா் 50 போ் அளித்த மனு:

முப்பதுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த ஞானம்மாள் என்வருக்கு சொந்தமான காலி நிலம், காலனி பகுதி மக்கள் மயானக்கொள்ளை உள்ளிட்ட கோயில் திருவிழாக்கள் நடத்திக் கொள்ளவும், கோயில் கட்டிக் கொள்ளவும் தானமாக வழங்கினாா். அந்த இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் முறைகேடாக பட்டா பெயா் மாற்றி ஆக்கிரமித்து வருகிறாா்.ஆகவே கோயில் திருவிழா பயன்பாட்டுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை மீட்டு காலனி பகுதி மக்களின் பொதுபயன்பாடுக்கு கொண்டுவரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்வாா்திகான்பேட்டை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் இருந்த அன்வாா்திகான்பேட்டை அண்மையில் அரக்கோணம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைப்பு செய்து மீண்டு காவேரிப்பாக்கம் ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தொடா்ந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கேட்டு 356 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில், கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த இளம்பரிதி - சரஸ்வதி தம்பதி குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வழங்கினாா்.

குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஸ்ரீவள்ளி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com