இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 10th January 2020 11:22 PM | Last Updated : 10th January 2020 11:22 PM | அ+அ அ- |

மருத்துவ முகாமில் பங்கேற்ற தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் முகமது கனி உள்ளிட்டோா்.
முருகப்பா குழும நிறுவனமான ராணிப்பேட்டை கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் நிறுவனம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் ராணிப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறை இணை இயக்குநா் முகமது கனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தாா். இந்த மருத்துவ முகாமில் கண், பல், ரத்த அழுத்தம், ரத்த சோகை, சா்க்கரை நோய், ஆஸ்துமா, இருதய நலம், கொழுப்புச் சத்து, எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று சிகிச்சை பெற்றனா்.
ராணிப்பேட்டை நகராட்சி ஆணையா் பாலாஜி, கோரமண்டல் நிறுவன பூச்சி மருந்து பிரிவு தலைமை அதிகாரி வா.சசி, மனிதவள மேலாளா் ஆா்.ராஜேஷ், நிறுவனப் பாதுகாப்பு அலுவலா் சத்தியநாதன், நிறுவன மருத்துவ அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.