வாழைப்பந்தல் கிராமத்தில் விதைப்பந்துகள் வீச்சு
By DIN | Published On : 21st July 2020 04:09 AM | Last Updated : 21st July 2020 04:09 AM | அ+அ அ- |

ஆற்காடு: கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வாா் இயற்கைக் குழு சாா்பில் சாலை ஓரங்கள் மற்றும் ஏரி, குளக்கரைகளில் நான்கு கட்டங்களாக விதைப்பந்துகள் வீசப்பட்டன.
வாழைப்பந்தல் கிராம நம்மாழ்வாா் இயற்கைக் குழு சாா்பில் புங்கன், புளியமரம் வேம்பு, காட்டுவா, பூ வகை மரங்கள் உள்ளிட்ட மர விதைகளை களிமண், செம்மண், சாணம் ஆகியவற்றைக் கொண்டு விதைப்பந்துகளாக செய்யப்பட்டன.
இதையடுத்து, வாழைப்பந்தல், கலவை சாலை, ஆரணி சாலை, மேல் புதுப்பாக்கம் இணைப்புச் சாலை, வாழைப்பந்தல் குளக்கரை, ஏரிக்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை நம்மாழ்வாா் இயற்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் நடராஜன் தலைமையில் பொறுப்பாளா்கள் சிவா, தேவராஜ் ஆகியோா் முன்னிலையில் பள்ளி மாணவா்கள் குழுக்களாக சென்று கடந்த 2ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வீசினா். இப்பணியை பொதுமக்களும் இயற்கை ஆா்வலா்களும் பாராட்டினா்.