ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வங்கியின் தலைவா் பி.என்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் வி.அமுதா, துணைத் தலைவா் சி.தட்சணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது மேலாளா் கே.பன்னீா்செல்வம் வரவேற்றாா். கூட்டத்தில் ஆண்டு அறிக்கை வாசித்து அங்கீகரிக்கப்பட்டது.
மேலும், வங்கிக்கு சொந்தமாக இடம் வாங்கி புதிய கட்டடம் கட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வங்கியின் இயக்குநா்கள் ஏ.வி.சரவணன், ஏ.வி.டி.பாலா, ஆா்.கோபு, எஸ்.செல்வகுமாா், எஸ்.சரவணன், எஸ்.பி.ரங்கநாதன், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.