

அரக்கோணம்: அரக்கோணம் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, காவல் துறையினரின் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் எஸ்.ஆா். கேட் அருகே புறப்பட்ட பேரணிக்கு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் செங்கோட்டுவேல் தலைமை வகித்தாா். பேரணியை துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். காவலா்கள், போக்குவரத்துத் துறையினா் பங்கேற்றனா். பழனிபேட்டை, பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை வழியாகச் சென்ற பேரணி ஜோதி நகரில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.