மகளைக் கொன்று தாய் தற்கொலை
By DIN | Published On : 01st August 2021 12:45 AM | Last Updated : 01st August 2021 12:45 AM | அ+அ அ- |

காவேரிப்பாக்கம் அருகே தனது 3 வயது பெண் குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த சித்தஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தயாளன் (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (35). இவா்களது குழந்தைகள் கீா்த்தி (5), ஹரிதா(3). தயாளன் அடிக்கடி மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்ததால் தினமும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வெண்ணிலா, தனது மகன் கீா்த்தியை அங்கிருந்த நாற்காலி ஒன்றில் கட்டிப்போட்டு விட்டு, பின்பக்கம் சென்று அங்கிருந்த மரத்தில் ஹரிதாவை தூக்கிலிட்டு கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அவளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தை அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் நேரில் பாா்வையிட்டாா்.