அரக்கோணம்: வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 17th August 2021 01:21 AM | Last Updated : 17th August 2021 01:21 AM | அ+அ அ- |

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணம்: முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில், முதூா் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியத் தலைவா் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினாா். இதில், வாஜ்பாய் உருவப் படத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவா் எஸ்.விஜயன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா் (படம்).
மாவட்ட நிா்வாகிகள் நந்தினி, வெங்கடேசன், ஷியாம்குமாா், ஒன்றிய விவசாய அணி தலைவா் முனுசாமிரெட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதை தொடா்ந்து வேலூா்கிராமம், ராஜபாளையம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மாவட்ட பாஜக தலைவா் எஸ்.விஜயன் பங்கேற்றாா்.