அரக்கோணம் தலைமை அஞ்சலகம் இடமாற்றம்
By DIN | Published On : 21st August 2021 07:40 AM | Last Updated : 21st August 2021 07:40 AM | அ+அ அ- |

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் ஆகஸ்ட் 23 முதல் தற்காலிகமாக புதிய இடத்தில் செயல்பட உள்ளது.
இது குறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சிவசங்கா் கூறியது:
சொந்த இடத்தில் இயங்கி வரும் அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம், அங்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளதால், சுவால்பேட்டை, அரசு மருத்துவமனை எதிரே, டவுன்ஹால் தெருவில் உள்ள தனியாா் கட்டடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது. புதிய இடத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் என்றாா்.