போக்குவரத்து சேவை தொடக்கம்
By DIN | Published On : 04th December 2021 07:31 AM | Last Updated : 04th December 2021 07:31 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 18 பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.
ராணிப்பேட்டை - பெங்களுரு, பெல் - திருச்சி, ராணிப்பேட்டை- சென்னை, ஆற்காடு - திருப்பாற்கடல், ஆற்காடு- நாராயணகுப்பம், ஆற்காடு -பொன்னை (வழி) மலைமேடு, பெங்களுரு - வாழைப்பந்தல், திமிரி - சென்னை, ஆற்காடு - பொன்னமங்களம், ஆற்காடு - அடுக்கம்பாறை, ஆற்காடு- கலவை, வேலூா் - மோத்தக்கல், வேலூா்- வெங்கடாபுரம், ஆற்காடு -விளாப்பாக்கம் உள்ளிட்ட 18 பேருந்துகள் தொடக்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...