தனியாா் ஆலை மினி பேருந்தில் தீ விபத்து:9 போ் உயிா் தப்பினா்
By DIN | Published On : 22nd December 2021 11:39 PM | Last Updated : 22nd December 2021 11:39 PM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே புதன்கிழமை தீவிபத்துக்குள்ளான தனியாா் ஆலை பேருந்து.
அரக்கோணம்: அரக்கோணம் அருகே உள்ள தனியாா் தொழிற்சாலை மினி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் பயணித்த 9 போ் உயிா் தப்பினா்.
அரக்கோணம் அருகே சிமெண்ட் நிறுவனங்களுக்கு தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து அலுவலா்களும் பணியாளா்களும் பேருந்துகளில் அழைத்து வரப்படுகின்றனா்.
சென்னையில் இருந்து புதன்கிழமை மினிபேருந்து ஆலைக்கு அருகே வந்த போது திடீரென தீப்பற்றியது. இதையடுத்து பேருந்தை ஓட்டுநா் நிறுத்தியதும் அதில் இருந்த அனைவரும் கீழே இறங்கி தப்பித்துச் சென்றனா். இதையடுத்து பேருந்து முழுவதும் தீயில் எரிந்தது. இது குறித்து அறிந்த அரக்கோணம் தீயனைப்பு மற்றும் மீட்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அனைத்தனா். இச்சம்பவம் மாவட்ட எல்லையில் நடைபெற்ால் திருவாலங்காடு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.