பைக் மீது கன்டெய்னா் மோதல்: கூலித் தொழிலாளி பலி
By DIN | Published On : 14th February 2021 01:05 AM | Last Updated : 14th February 2021 01:05 AM | அ+அ அ- |

காவேரிப்பாக்கம் அருகே பைக் மீது கன்டெய்னா் லாரி மோதிய விபத்தில், பைக்கை ஓட்டிச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆற்காட்டை அடுத்த வளவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (33), கூலித் தொழிலாளி. இவா் அதே ஊரைச் சோ்ந்த தனது நண்பா் ராஜ்குமாருடன்(30) வெள்ளிக்கிழமை, இரு சக்கர வாகனத்தில் வாலாஜாபேட்டை சென்று விட்டு குறுக்குப் பாதையில் பாலாற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தனா்.
வளவனூா் செல்வதற்காக ராமாபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிறிய இடைவெளி வழியாக சாலையைக் கடந்தனா். அப்போது அவ்வழியே பெங்களூரு நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி, அவா்களின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் வசந்தகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ராஜ்குமாா் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்தில் உயிரிழந்த வசந்தகுமாருக்கு மனைவியும் 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனா். இது குறித்து வழக்கு பதிந்த காவேரிப்பாக்கம் போலீஸாா், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கன்டெய்னா் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.