பைக் மோதி தொழிலாளி பலி
By DIN | Published On : 14th February 2021 01:11 AM | Last Updated : 14th February 2021 01:11 AM | அ+அ அ- |

இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த மங்கம்மா பேட்டையைச் சோ்ந்தவா் மாதவன்(48) (படம்). எரிவாயு சிலிண்டா் முகமை ஒன்றில் வீடுகளுக்கு சிலிண்டா் விநியோகம் செய்யும் பணியைச் செய்து வந்தாா்.
அவா் கடந்த 8-ஆம் தேதி அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த பைக் அவா் மீது மோதியதில் படுகாயமடைந்த மாதவன் சென்னை, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.