பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:20 AM | Last Updated : 27th February 2021 07:20 AM | அ+அ அ- |

வன்னியா்களுக்கு கல்வி மற்றும், அரசு வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியதற்கு வரவேற்பு தெரிவித்து ராணிப்பேட்டையில் பாமகவினரும், வன்னியா் சங்கத்தினரும் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
ராணிப்பேட்டை முத்துக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில், மாநில வன்னியா் சங்கச் செயலாளா் எம்.கே.முரளி தலைமையில் அச்சங்கத்தினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். இதேபோல் பாமகவினரும் ராணிப்பேட்டையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
ஆம்பூரில்...
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே பாமக மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். கட்சியின் நகர செயலாளா்கள் ஹரிஹரன், தமிழருவி, நகர தலைவா் ரமேஷ், முனுசாமி மாவட்ட துணைச் செயலாளா் ராஜா, வேலு, நேதாஜி, சரண்யா மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...