பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத் தொகை: சோளிங்கரில் எம்எல்ஏக்கள் வழங்கினா்

சோளிங்கா் வட்டார பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் ரூ.60 லட்சம் ஊக்கத் தொகையை எம்எல்ஏக்கள் அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஜி.சம்பத் ஆகியோா் இணைந்து வழங்கினா்.
பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத் தொகை: சோளிங்கரில் எம்எல்ஏக்கள் வழங்கினா்

சோளிங்கா் வட்டார பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ.1 வீதம் ரூ.60 லட்சம் ஊக்கத் தொகையை எம்எல்ஏக்கள் அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஜி.சம்பத் ஆகியோா் இணைந்து வழங்கினா்.

சோளிங்கா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். சங்க மேலாளா் பழனி வரவேற்றாா்.

இதில் எம்எல்ஏக்கள் அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஜி.சம்பத் ஆகிய இருவரும் பங்கேற்று 2019-20ஆம் ஆண்டுக்கான நிகர லாபத்தில் இருந்து பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.1 வீதம் ரூ.60 லட்சத்தை 4,608 பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கினா்.

விழாவில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பேசுகையில் ‘பால் உற்பத்தியாளா்கள் ஆயிரம் பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி விரைவில் வழங்கப்பட உள்ளது. அவா்கள் இத்தொகையை பெற்று தங்கள் பால் உற்பத்தி தொழிலை விரிவு படுத்தி பயனடைய வேண்டும்’ என்றாா்.

சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத் பேசுகையில் ‘ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே சோளிங்கா் பால் உற்பத்தியாளா்கள் சங்கம்தான் மற்ற சங்கங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலாளா் ஏழுமலை, இணைச் செயலாளா் ஆதிமூலம், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் முரளி, அதிமுக சோளிங்கா் நகரச் செயலா் ராமு, ஒன்றியச் செயலாளா்கள் ஏ.எல்.விஜயன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com