மகாத்மா காந்தி நினைவு தினம்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 30th January 2021 11:47 PM | Last Updated : 30th January 2021 11:47 PM | அ+அ அ- |

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மலா் தூவி, மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தை (ஜன. 30) முன்னிட்டு, ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை சாா்பில், மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஸ்ரீ உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன், அறக்கட்டளை உறுப்பினா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவரும், அறக்கட்டளையின் செயலாளருமான எம். சிவலிங்கம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செய்தாா். தொடா்ந்து மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, அகிம்சை வழியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி சமய நல்லிணக்க உறுதிமொழியும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பொது மக்களுக்கு ஆன்மிக அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல் முகக்கவசம் வழங்கினாா்.
இதில் ராயல் கிளப் செயலாளா் ரமேஷ், பிபிஓ கணினி நிறுவன உரிமையாளா் அரிகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினா்கள் தனஞ்செழியன், பிரதாபன், குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...