சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பூதபலி உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இவ்விழாவையொட்டி, சனிக்கிழமை காலையில் கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில், மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, சுக்ரத ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை, மகா தீபாராதனை, சுதா்சன ஹோமம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, பூத பலி பூஜையும், உற்சவமூா்த்தி கோயிலைச் சுற்றி வருதலும் நடைபெற்றது. ஸ்ரீநவசபரி சாஸ்தா சமிதியினரின் பஜனையும் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.