பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு
By DIN | Published On : 30th January 2021 11:49 PM | Last Updated : 01st February 2021 07:56 AM | அ+அ அ- |

பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு
ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான 28-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2021, ஜனவரி 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை காணொலியில் நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 4 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 30 ஆய்வுக் கட்டுரைகள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டன.
அதில் ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல் பள்ளி மாணவா்கள் மு.தினேஷ், யோ.ஜிவனா ஆகியோரின் ஆய்வுக் கட்டுரை தனித்துவம் வாய்ந்ததாக அறியப்பட்டு, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்கள், அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்த பள்ளி நூலகா் எம்.கே.பாஸ்கா் ரெட்டி ஆகியோரை பள்ளி முதல்வா் மு.கருப்பையா பாராட்டினாா்.