கல்லூரியில் இணைய வழி கருத்தரங்கம்
By DIN | Published On : 02nd July 2021 07:55 AM | Last Updated : 02nd July 2021 07:55 AM | அ+அ அ- |

மேல்விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி இணைந்து இணைய வழியாக தேசிய அளவிலான ஆசிரியா் மேம்பாட்டு திட்டம் திறமையான கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்ப மேம்பாடு எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
கடந்த 23-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு அப்துல் ஹக்கீம் கல்லூரி முதல்வா் எஸ்.ஏ.சாஜித் தலைமை வகித்தாா். பச்சையப்பன் கல்லூரி முதல்வா்(பொறுப்பு) ஆா். ஸ்ரீஜெயந்தி முன்னிலை வகித்தனா்.
சென்னை வைஷ்ணவா கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியா் த.வேல்முருகன், பெங்களூரு பிரான்சீஷ் கல்லூரி உதவி பேராசிரியா் ஜெ.பெனட் ராஜதுரை ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். மேலும் இணைய வழியாக மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் பற்றி விளக்கபட்டது.
இதில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியா்கள் 600 போ் கலந்து கொண்டனா்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவா் முஹமதுபாரூக், ஒருங்கிணைப்பாளா் பி.குமரன், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.