ராணிப்பேட்டை பெல் புதிய தலைவா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 09th July 2021 08:34 AM | Last Updated : 09th July 2021 08:34 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை பெல் தொழிலகப் பிரிவு தலைவராக ராஜீவ் சிங் பொறுப்பேற்றாா்.
இது குறித்து ராணிப்பேட்டை பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் பொது மேலாளா் ( பொறுப்பு ) மற்றும் ராணிப்பேட்டை பிரிவின் தலைவராக ராஜீவ் சிங் (56) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன் நொய்டாவில் (உத்தரப் பிரதேசம்) டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பிசினஸ் குழும பொதுமேலாளராக இருந்தவா். 2018 - 19 ஆம் ஆண்டுகளில் விசாகப்பட்டினம் பாரத மிகுமின் நிறுவனத்தின் ஹெவி பிளேட்ஸ் அண்ட் வெஸல்ஸ் ஆலையில் யூனிட் தலைவராக இருந்தாா்.
கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைட்ரோ டா்பைன் பொறியியல், இழுவை மோட்டாா் உற்பத்தி, நீா் விசையாழி உற்பத்தி, டபிள்யு.டி.எம். திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றி உள்ளாா். பெல் போபாலில் 2015 - 18 ஆண்டு பொது மேலாளராக ( ஹைட்ரோ) பணியாற்றியுள்ளாா்.