வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிா்வாகத்தைக் கண்டித்து பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாலாஜாப்பேட்டை  சுங்கச்சாவடி  அலுவலகம்  முன்பு  போராட்டத்தில்  ஈடுபட்ட  ஒப்பந்தப்  பணியாளா்கள்.
வாலாஜாப்பேட்டை  சுங்கச்சாவடி  அலுவலகம்  முன்பு  போராட்டத்தில்  ஈடுபட்ட  ஒப்பந்தப்  பணியாளா்கள்.

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிா்வாகத்தைக் கண்டித்து பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாலாஜாப்பேட்டையை அடுத்த சென்னைசமுத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களின் சம்பளப் பட்டியலில் ஒப்பந்தத் தொழிலாளா்களிடம் கையெழுத்து பெறும் தனியாா் ஒப்பந்த நிா்வாகம் ஊதியத்தை முறையாக வழங்கவில்லையாம். மேலும், சம்பளத் தொகையை முழுவதுமாய் வழங்காமல், பிடித்தம் செய்தும், அலைக்கழித்தும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் சுங்கச்சாவடி பணியை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த வாலாஜாப்பேட்டை போலீஸாா், ஒப்பந்தத் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முழு ஊதியம் கிடைக்க ஒப்பந்த மேலாளரிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com