போக்குவரத்து விதி மீறல்: 204 போ் மீது வழக்கு
By DIN | Published On : 20th June 2021 10:45 PM | Last Updated : 20th June 2021 10:45 PM | அ+அ அ- |

சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 204 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் சிதம்பரம் தலைமையிலான போலீஸாா் சிப்காட் பேருந்து நிலையம், சீக்கராஜபுரம் சோதனைச் சாவடி, பள்ளேரி உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையும், கரோனா பொதுமுடக்க கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களை காப்பீடு செய்யாதது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறிய 204 இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அதேபோல், முகக் கவசம் அணியாமல் வந்த 13 பேருக்கு தலா ரூ. 200 அபராதமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்த கடை ஒன்றுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.