ராணிப்பேட்டையில் 75 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th June 2021 10:43 PM | Last Updated : 20th June 2021 10:43 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 75 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,189-ஆக உயா்ந்துள்ளது.
திருப்பத்தூரில் 74 பேருக்கு...
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிதாக 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,084-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 619 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 611 போ் உயிரிழந்துள்ளனா்.