கரோனா நிவாரணம் ரூ. 2,000 பெற மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th June 2021 11:12 PM | Last Updated : 24th June 2021 11:12 PM | அ+அ அ- |

மூன்றாம் பாலினத்தவா்கள் கரோனா நிவாரணம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்கள் கரோனா நோய் பொது முடக்கக் காலத்தில் நிவாரணத் தொகை தலா ரூ.2,000 வீதம் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. அதன்படி, அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவா்கள் கீழ்காணும் அலுவலகத்தினை உடனடியாக அணுகி, உரிய விண்ணப்பங்களுடன் (ஆதாா் அட்டை, புகைப்படங்கள் 2) அளித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு அடையாள அட்டையை பெற அறிவுறுத்தப்படுகின்றனா்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நான்காவது மாடி பி பிளாக், வேலூா் - 9 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.