ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 25th March 2021 12:00 AM | Last Updated : 25th March 2021 12:00 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது.
இது குறித்து மாவட்ட சுகாதார நல அலுவலா் வீராசாமி கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், வாலாஜாப்பேட்டை வட்டங்களில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாள்களாக திருமணம், திருவிழாக்கள், அரசியல் கட்சிக் கூட்டங்களில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள் கூட்டம் காரணமாக நோய்த்தொற்று பரவியிருக்கலாம்.
அதேபோல், அரக்கோணம் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் சென்னைக்கு சென்று வருவதாலும் நோய் பரவக்கூடும்.
இந்த சூழலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் குறைய வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் கடந்த நாள்களாக அதிகரித்துவரும் நோய்த் தொற்று இரண்டாம் அலை எனக் கூற முடியாது என்றாா்.