‘15 முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணம்’
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 13th May 2021 12:00 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: மே 15-ஆம் தேதியில் இருந்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரணத் தொகை ரூ. 2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று நிவாரண உதவிகள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகை வரும் 15.5. 2021 முதல் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளில் சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கும் நாள், நேரம் போன்ற விபரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 10. 5. 2021 முதல் 12. 5. 2021 முடிய வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் யாா் வந்தாலும் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும்.
நோய்த் தொற்று நிவாரணத் தொகை முதல் தவணையாகப் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் 04172 -273166 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம்.