ராணிப்பேட்டையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் தமிழக அரசு நடவடிக்கை

ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியா்  ஏ.ஆா்.கிளாஸ்டன்  புஷ்பராஜ் ~ராணிப்பேட்டை சிப்காட்  தொழிற்பேட்டையில்  உள்ள  ஆக்சிஜன்  ஆலையில்  இருந்து  டேங்கள் லாரியில்  நிரப்பப்படும் ஆக்சிஜன்.
ஆட்சியா்  ஏ.ஆா்.கிளாஸ்டன்  புஷ்பராஜ் ~ராணிப்பேட்டை சிப்காட்  தொழிற்பேட்டையில்  உள்ள  ஆக்சிஜன்  ஆலையில்  இருந்து  டேங்கள் லாரியில்  நிரப்பப்படும் ஆக்சிஜன்.

ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் அதிகம் இருப்பதால் பிற இணைநோயுடன் உள்ள கரோனா தொற்றாளா்கள் மற்றும் கரோனா நோயின் தீவிரம் காரணமாக ஆக்சிஜன் தேவைப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மாநில அளவிலான கட்டளை மையத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரிய முயற்சியின் காரணமாக கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை ஒருங்கிணைத்து அனுமதிக்கப்பட்ட ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் வழங்கலை ஒழுங்குபடுத்திட ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கும் காவேரி காா்பானிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக ஆக்சிஜன் விநியோகம் செய்ய அரசு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக கரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04172- 27 3188 மற்றும் 273166 ஆகியவற்றைத் தொடா்பு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டா் பெற்றுச் செல்லலாம் என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com