புரட்டாசி 5ஆம் சனிக்கிழமை: ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
By DIN | Published On : 16th October 2021 02:05 PM | Last Updated : 16th October 2021 02:05 PM | அ+அ அ- |

ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை.
புரட்டாசி மாதம் 5-ஆவது சனி வார விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் பஜனை கோவிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கே.வெங்கடேசன், அறக்கட்டளை செயலாளரும், வெற்றி வேலன் பள்ளி தாளாளருமான எம். சிவலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து கோயில் குருக்களுக்கு அரிசி தானம் வழங்கினர்.